நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 52,000 ஐ கடந்தது!

202008280649151935 Corona infection can affect all organs medical experts SECVPF 1
202008280649151935 Corona infection can affect all organs medical experts SECVPF 1

நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 52,000 ஐ கடந்தது.

நேற்றைய தினம் 719 பேருக்கு தொற்றுறதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நாட்டில் தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 52 ஆயிரத்து 313 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் தொற்றுறுதியானவர்களில்இ 697 பேர் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்களாவர் என்பதுடன்இ 18 பேர் சிறைச்சாலை கொத்தணியை சேர்ந்தவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏனைய நான்கு பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களாவர்.

குவைத், ரஷ்யா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் எத்தியோப்பியா முதலான நாடுகளில் இருந்து வந்த தலா ஒவ்வொருவருக்கே தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, யாழ்பபாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்றையதினம் 416பேருக்கு கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது வடமாகாணத்தில் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் ஒருவருக்கும், வவுனியா மாவட்டத்தில் 2 பேருக்கும் தொற்றுறுதியானது.

யாழ்ப்பணம் மாவட்டத்தில் 7 பேருக்கு தொற்றுறுதியானது

கோப்பாய் சிகிச்சை நிலையத்தில் 5 பேருக்கும், ஜம்புகோளப்பட்டினம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் 2 பேருக்கும் தொற்றுறுதியானதாக வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் மேலும் 487 பேர் கொவிட்-19 தொற்றில் இருந்து நேற்று குணமடைந்தனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44 ஆயிரத்து 746 ஆக அதிகரித்துள்ளது.

7 ஆயிரத்து 311 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.