வாசுதேவ நாணயக்காராவின் பணியாளர்களுக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்படவில்லை!

Vasudeva 850x460 acf cropped
Vasudeva 850x460 acf cropped

கொரோனா தொற்றுறுதியான நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்காராவின் செயலாளர் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் ஊழியர்களுக்கு அண்மையில் பி. சி. ஆர் பரிசோதனை செய்யப்பட்டது.

அந்த பரிசோதனையின் முடிவுகளின் படி நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்காராவின் செயலாளர் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் ஊழியர்களுக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்படவில்லை என நீர்வழங்கல் அமைச்சு அறிவித்துள்ளது.

மாகாண பிரதிநிதிகளும் தன்னார்வமாக பி.சி.ஆர் பரிசோதனையை செய்து கொண்டதுடன்இ அவர்களுக்கும் கொரோனா தொற்றுறுதி இல்லையென உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படிஇ சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்கள் படி அமைச்சரவையின் பணிகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.