வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள 192 நபர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

IMG 20210113 095034
IMG 20210113 095034

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வாழைச்சேனை, புதுக்குடியிருப்பு, பேத்தாழை, நாசிவந்தீவு, கண்ணகிபுரம் ஆகிய பகுதிகளில் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் பதினாராம் திகதி வரை டெங்கு பரவும் வகையில் இடங்களை வைத்திருந்த இருபத்தொரு நபர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரிவைத்தியர் தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தெரிவித்தார்.

IMG 20210113 094135

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் வாழைச்சேனை, புதுக்குடியிருப்பு, பேத்தாழை, நாசிவந்தீவு, கண்ணகிபுரம் ஆகிய கிராமங்களில் டெங்கு நுளம்பு. குடம்பிகள் காணப்படுகின்ற இடங்களை அடையாளப்படுத்தி மக்களுக்கு தெளிவூட்டும் நடவடிக்கையும், வீட்டு வளாகம் பரிசோதனை செய்யும் நடவடிக்கையும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

IMG 20210113 100809

அந்தவகையில் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் வழிகாட்டலில் புதுக்குடியிருப்பு கிராம சேவகர் பிரிவில் வீட்டு வளாகம் பரிசோதனை செய்யும் நிகழ்வு பொது சுகாதார பரிசோதகர் என்.எம்.எம்.சிஹான் தலைமையில் நடைபெற்ற போது பொதுச் சுகாதார பரிசோதகர் அலுவலக டெங்கு வெளிக்க உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு வீடுகள் மற்றும் பொது இடங்கள் என்பன பரிசோதனை செய்யப்பட்டது.

IMG 20210113 101353

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள வாழைச்சேனை, புதுக்குடியிருப்பு, பேத்தாழை, நாசிவந்தீவு, கண்ணகிபுரம் ஆகிய பகுதிகளில் இம்மாத ஆரம்பத்தில் நூற்றி தொன்னூற்றி இரண்டு (192) நபர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், இருபத்தொரு (21) நபர்களுக்கு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தெரிவித்தார்.

IMG 20210113 100513

வாழைச்சேனை, புதுக்குடியிருப்பு, பேத்தாழை, நாசிவந்தீவு, கண்ணகிபுரம் கிராம சேவை அதிகாரி பிரிவில் டெங்கு நுளம்பு பெருகும் வகையில் இடங்களை சுத்தம் இல்லாமல் வைத்திருந்தவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் ஏழு அல்லது பதினான்கு நாட்களுக்கு பின்னர் சுத்தம் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருவதுடன், சுத்தம் செய்யாமல் காணப்படும் நிலையில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்று பொது சுகாதார பரிசோதகர் என்.எம்.எம்.சிஹான் தெரிவித்தார்.