இலங்கைக்கு 400 மில்லியன் கடனுதவி

modi and gotabaya
modi and gotabaya

இந்திய பிரதமரின் அழைப்பின் பெயரில் இந்தியாவிற்கு 3 நாள் சுற்றுப்பயணத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இந்திய பிரதமர் மோடியை டெல்லியில் உள்ள ஹைதராபாத் மாளிகையில் சந்தித்து கலந்துரையாடினர்.

இலங்கையின் புதிய ஜனாதிபதி தமது வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு தமது அரசு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குமென இந்தியப் பிரதமர் தெரிவித்தார்.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிற்கிடையிலான பேச்சுவார்த்தையினை அடுத்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கையின் கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்காக 400 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்படும் என இந்தியப் பிரதமர் உறுதியளித்துள்ளார்.

பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக மேலும் 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படுமெனவும் நரேந்திர மோடி தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான புதிய அரசு ஈழத்தமிழர்களின் நலனுக்காக செயல்படும் என உறுதியாக நம்புவதாகவும் இதன் போது தெரிவித்திருந்தார்.