எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச

sajith and ranil 1
sajith and ranil 1

சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களிடையே இணக்கம் ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சித் தலைவர்கள், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரிற்கிடையில் இடம்பெற்ற சந்திப்புக்களையடுத்து குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த முயற்சியின் பயனாக எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவையும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்கவையும் செயற்பட வைப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் ஐக்கிய தேசிய கட்சி எதிர்க்கட்சியாக அறிவிக்கப்பட்டுள்ள போதும் எதிர்க்கட்சித்தலைவர் யார் என இன்னும் அறிவிக்கப்படாதுள்ளமை குறிப்பிடத்தக்கது.