மணல் விலையை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் அரசாங்கம் நிச்சயமாக தலையீடு செய்யும் – மகிந்த அமரவீர

R78bb4aadd564370f2280f0d764058244
R78bb4aadd564370f2280f0d764058244

அதிகரித்து செல்லும் மணல் விலையை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் அரசாங்கம் நிச்சயமாக தலையீடு செய்யும் என சுற்றாடல்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சுற்றாடல்துறை அமைச்சில் நேற்று இடம்பெற்ற மணல் விநியோகம் செய்யும் சங்கங்கள் சிலவற்றின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி செயலணியின் பரிந்துரைக்கு அமைய மணல் விநியோக பணிகளின் போது முழுமையாக அரசாங்க தலையீட்டின் கீழ் இடம்பெற வேண்டும்.

மணல் வர்த்தகர்களால் அதிக விலைக்கு மணல் விநியோகித்தல், முற்பதிவு செய்கின்ற போது அளவுக்கு ஏற்ற வகையில் மணல் பொது மக்களுக்கு வழங்காமை மற்றும் மணம்பிட்டிய மணல் எனக்கூறி ஏனைய மணல்களை மக்களுக்கு விற்பனை செய்தல் உள்ளிட்ட மோசடிகள் தொடர்பில் இந்த கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.