உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பினரால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

01 3
01 3

ஜேர்மனியின் ஸ்ருட்காட்டை தளமாக கொண்டு இயங்கிவரும் உறவுகளுக்கு கரம் கொடுப்போம் என்ற சமூக சேவை நிறுவனத்தால் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

சுவிஸ் நாட்டில் வசிக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத ஈழத்தமிழர் ஒருவரின் நிதியுதவியில் மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலகத்துக்குட்பட்ட காயங்கேணி சரஸ்வதி வித்தியாலயத்தில் கல்விகற்கும் 66 வறிய மாணவர்களுக்கே இவ்வாறு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

பாடசாலை அதிபரின் எஸ்.மோகனசுந்தரம் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட செயற்பாட்டாளர் சு.சியாந் மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டு குறித்த கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.

உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பிற்கும் அதன் மட்டக்களப்பு மாவட்ட செயற்பாட்டாளருக்கும் பாடசாலையின் சார்பின் நன்றிகளை பாடசாலை அதிபர் தெரிவித்துக் கொண்டார்.

இதேவேளை உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பினரால் மட்டக்களப்பின் பல்வேறு பின்தங்கிய பிரதேசங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இவ்வாறான உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.