கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 850 ஆக உயர்வடைந்துள்ளது.

coronavirus.positive.1 768x384 1
coronavirus.positive.1 768x384 1

நாட்டில் நேற்றைய தினம் 735 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொவிட் 19 தொற்றுறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 67 ஆயிரத்து 850 ஆக உயர்வடைந்துள்ளது.

அவர்களில் 729 பேர் பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி மினுவாங்கொடை, பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொத்தணியில் தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 63 ஆயிரத்து 849 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 6 பேருக்கும் நேற்றைய தினம் கொவிட் 19 தொற்றுறுதியானது.

அவர்கள் அனைவரும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், 6 ஆயிரத்து 46 கொவிட் 19 நோயாளர்கள் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்றைய தினம் மாத்திரம் கொவிட்-19 தொற்றில் இருந்து மேலும் 894 பேர் குணமடைந்தனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொவிட் 19 தொற்றலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 61 ஆயிரத்து 461 ஆக அதிகரித்துள்ளது