மாநகர முதல்வரின் விசேட அறிவிப்பு

jaffna
jaffna

தற்பொழுது டெங்கு நோய் அதிகம் பரவி வருகின்றமையினால் மாநகர எல்லைக்குள் வசிக்கும் மக்கள் தங்களது வீடுகளில் மழை நீர் மற்றும் கழிவு நீர் தேங்கி நுளம்பு உற்பத்தியாகக் கூடிய இடங்களை விரைந்து சுத்தப்படுத்துமாறு யாழ் மாநகர சபை முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

டெங்கு நோய்த்தாக்கத்தை உடனடியாக கட்டுப்படுத்தும் நோக்கில் வீடுகளில் உள்ள நீர் தேங்கும் கொள்கலன்களை அகற்றுவதற்கு சனிக்கிழமைகளில் வட்டார ரீதியாக அகற்றுவதற்கு விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புறச்சூழலை சுத்தப்படுத்தி டெங்கை கட்டுப்படுத்தும் வகையில் துப்பரவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

மாநகர சுகாதாரப் பிரிவினர் மற்றும் சுற்றாடற் பொலிஸ் பிரிவினர் தங்கள் வீடுகளை பரிசோதிக்க வருகின்ற பொழுது சுற்றுச் சூழல் சுத்தமாக காணப்படாவிட்டால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.