முல்லைத்தீவில் சிங்கள பயிற்சி நெறியின் இறுதி நாள் நிகழ்வு

FB IMG 1613722856398
FB IMG 1613722856398

பொதுச்சேவைகள் மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் கீழ் செயற்படுகின்ற தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தால் முல்லைத்தீவு கமநல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான 150 மணித்தியாலயங்களைக் கொண்ட இரண்டாம் மொழி சிங்கள பயிற்சி நெறியின் இறுதி நாள் நிகழ்வு இன்று(19) காலை 9.30மணிக்கு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் எஸ்.புனிதகுமார் அவர்களும், சிறப்பு விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் லிசோ கேகிதா அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந் நிகழ்வில் பயிற்சி நெறியின் கற்கை வெளிப்பாடுகளை உள்ளடக்கியதாக பங்குபற்றிய உத்தியோகத்தர்களின் ஆளுமையை வெளிப்படுத்துகின்ற வகையில் பல்துறைப்பட்ட கலைநிகழ்வுகள் மற்றும் அனுபவப்பகிர்வுகள் இடம்பெற்றன.

மேலும் பயிற்சி நெறியின் வளவாளர்களாக பங்குபற்றிய சுமித் பிரசன்னா, ஆர்.சபிதா மற்றும் மாவட்ட செயலக தேசிய மொழிகள் பிரிவின் இணைப்பாளர் தாமரைச்செல்வி ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.