15 பெண்கள் தற்கொலை தாக்குதலை மேற்கொள்வதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் : விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக காவற்துறை பேச்சாளர் தகவல்!

ajith rohana 1 720x450 1
ajith rohana 1 720x450 1

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி என கருதப்படும் ஜஹ்ரான் ஹாசிமின் போதனை வகுப்புகளில் கலந்துகொண்ட பெண்கள் தற்கொலை தாக்குதலை மேற்கொள்வதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் என்பது விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக காவற்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


ஜஹ்ரான் ஹாசிமின் போதனை வகுப்புகளில் கலந்துகொண்ட பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இது தெரியவந்துள்ளதாக காவற்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


பயங்கரவாத விசாரணை பிரிவினர் குறிப்பிட்ட 24 வயது பெண்ணை விசாரணைக்கு உட்படுத்தியவேளை இது குறித்து தெரியவந்துள்ளதாக காவற்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

2018 டிசம்பரில் குறிப்பிட்ட வகுப்பில் 15 பெண்கள் கலந்துகொண்டனர் அவர்கள் தாங்கள் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொள்வதாக ஜஹ்ரான் ஹாசிமிற்கு சபதம் செய்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
15 பேரில் ஐவர் சம்மாந்துறையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பின் போது கொல்லப்பட்டுவிட்டனர் என்பது தெரியவந்துள்ளது என தெரிவித்துள்ள காவற்துறை பேச்சாளர் ஏனைய பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.


இறுதியாக கைதுசெய்யப்பட்ட 24 வயது பெண் மாவனல்லையை சேர்ந்தவர் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் அவரை கைது செய்துள்ளோம் எனகாவற்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இவரின் தந்தையும் மூன்று சகோதரிகளும் ஏற்கனவே தடுப்புக்காவலின் கீழ் உள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.