கொரோனா தடுப்பூசிகளை சரியான நேரத்தில் கொள்வனவு செய்யவில்லை- ராஜித

rajitha
rajitha

கொரோனா தடுப்பூசிகளைச் சரியான நேரத்தில் கொள்வனவு செய்திருந்தால் இவ்வளவு பிரச்சினை ஏற்பட்டிருக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

தடுப்பூசிகளைத் தேவையான நேரத்தில் கொள்வனவு செய்யத் தவறியமை காரணமாகப் பொதுமக்கள் தடுப் பூசிகளைப் பெற்றுக் கொள்வதில் பல்வேறு சிக்கல்களை எதிர் கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் கொரோனா தடுப்பூசி பெற்றிருந்தால் இந்நாட்டின் சகல மக்களுக்கும் தற்போது செலுத்தியிருக்கலாம் என எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

2021 வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதத்தின் போதும், ஆறு மாதங்களுக்கு முன்பு இடம்பெற்ற கொரோனா தொற்று தொடர்பான விவாதத்தின் போதும் தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

ஆனால் தற்போது கொள்வனவு செய்திருக்கும் கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை சனத்தொகையுடன் ஒப்பிடும்போது போதுமானதாக இல்லை என்றும் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டினார்.