சட்டவிரோத மீன்பிடி முறைமைகளை தடுக்க ஒன்றிணையவுள்ள வடக்கு மீனவ அமைப்புக்கள்!

received 336690817760128
received 336690817760128

சட்டவிரோத மீன்பிடி முறைமைகளை தடுக்க  வடக்கு மாகாணத்தின் நான்கு மாவட்டங்களின் மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்

மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் முல்லைத்தீவு மீனவ பிரதிநிதிகளுக்கும் யாழ்ப்பாண மீனவ பிரதிநிதிகளுக்கும் இடையில் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசத்தில் இன்று காலை சந்திப்பு  ஒன்று இடம்பெற்றது 

குறித்த சந்திப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் காரணமாக மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள்  குறித்து ஆராயப்பட்டு குறித்த சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் ஒவ்வொருவர் ஒவ்வொரு நிலைப்பாட்டில் இருந்ததாகவும் எனவே நான்கு மாவட்ட மீனவ அமைப்பு பிரதிநிதிகளும் இணைந்து ஒட்டுமொத்தமாக சட்டவிரோத மீன்பிடி முறைகளை தடுக்கும் முகமாக ஒரு நிலைப்பாட்டுக்கு வரும் முகமாக குறித்த சந்திப்பு இடம்பெற்றது

முல்லைத்தீவை தொடர்ந்து கிளிநொச்சி மன்னார் மாவட்ட  மீன்பிடி அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடி எதிர்காலத்தில் ஒற்றுமையாக ஒரு நிலைப்பாடாக அனைத்து மாவட்டங்களிலும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்காக செயற்பட போவதாக மீனவ அமைப்பின் பிரதிநிதிகள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்