மத்திய கலாசார நிதியத்தின் நிதிப் பயன்பாடு தொடர்பில் விசாரிக்கக் கோரிக்கை!

T.B.Ekanayake
T.B.Ekanayake

மத்திய கலாசார நிதியிலிருந்து (CCF) ரூ 3.6 பில்லியனை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரத்தை விசாரணை செய்வதற்கான சிறப்பு பாராளுமன்ற தேர்வுக்குழுவை நியமிக்க கூட்டு எதிர்க்கட்சி எம்.பி. டி.பி. ஏகநாயக்க நேற்று அழைப்பு விடுத்தார்.பாராளுமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தை நகர்த்திய எம்.பி. ஏகநாயக்க, நிதியை நிருவகிக்கும் குழுவின் ஒப்புதல் இல்லாமல் CCF-ல் இருந்து ரூ 3.6 பில்லியன் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது என்றார். இந் நிதியின் தலைவராக பிரதமர் உள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு நோக்கத்திற்காகவும் இந்நிதி பயன்படுத்தப்பட்டிருந்தால், அது தொடர்பான விபரங்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். வாரியத்தின் ஒப்புதல் இல்லாமல் நிதி விடுவிக்கப்பட்டிருந்தால் அது பொதுச்சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றமாகும் என ஏகநாயக்க தெரிவித்துள்ளார். CCF நிர்வாக வாரியம் கடந்த எட்டு மாதங்களாக சந்திக்கவில்லை என்று அதன் உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். இந்த குறைபாடுகள் அனைத்திற்கும் பிரதமர் நிதியத்தின் தலைவர் என்ற வகையில் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்

நிதியம் தொடர்பாக சட்டமன்றத்தின் அதிகாரங்களைப் பயன்படுத்தி குற்றச்சாட்டுகளை ஆராய ஒரு தேர்வுக் குழுவை நியமிக்க எம்.பி. அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது,