உள்நாட்டு உற்பத்திக் கைத்தொழில்களை முன்னேற்றுவதற்கான அபிவிருத்தி குழுக் கூட்டம்!

IMG 20210317 WA0043
IMG 20210317 WA0043

கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதன் பொருட்டு ஸ்தாபிக்கப்பட்ட உள்நாட்டு உற்பத்திக் கைத்தொழில்களை முன்னேற்றுவதற்கான அபிவிருத்தி குழுக் கூட்டத்தின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிற்கான முதலாவது கூட்டமானது இன்று யாழ் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் கடற்றொழி்ல் அமைச்சர் கெளரவ டக்ளஸ் தேவானந்தா, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அங்கஜன் இராமநாதன் ஆளுநர் திருமதி சார்ள்ஸ், கம்பனித் தோட்டங்களைச் சீர்திருத்துதல், தேயிலைத் தோட்டங்கள், சார்ந்த பயிர்ச்செய்கைகள் மற்றும் தேயிலைத் தொழிற்சாலைகள் நவீனமயப்படுத்துதல் மற்றும் தேயிலை ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் கௌரவ கனக ஹேரத் , இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கௌரவ லொஹான் ரத்வத்த , வாகன ஒழுங்காற்றுகை, பேருந்துப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் புகையிரதப் பெட்டிகள், மற்றும் மோட்டார் வாகனக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கௌரவ திலும் அமுனுகம ,நா.உ சிவஞானம் ஸ்ரீதரன் , கெளரவ தவிசாளர்கள், அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.

குறித்த கூட்டத்தின்போது கடற் தொழில் சம்பந்தமாக கடற்றொழில் பிரதிநிதிகளால் இந்திய இழுவைப் படகு தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்ட போது அதற்கு பதிலளித்த கடற்றொழில் அமைச்சர் குறித்த இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையானது நீண்டகாலமாக இடம்பெற்று வருவதாகவும் எனினும் அந்த பிரச்சனையை விரைவில் தீர்க்க வேண்டிய தேவை உள்ளது எனவும் தெரிவித்ததோடு இரண்டு நாட்டு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு மாதங்களுக்குள் அந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதிமொழி அளித்தார் அத்தோடு யாழ்ப்பாண மாவட்டத்தில் குறிப்பாக தீவு பகுதிகளில் தென்னை மற்றும் கஜு பயிற்செய்கைகளை மேம்படுத்துவதற்கு மக்கள் ஆதரவாக உள்ளார்கள் என தெரியபடுத்தபடுத்தபட்டதோடுபெருந்தோட்ட அமைச்சர் குறித்த பகுதிக்கு தென்னை மற்றும் மர முந்திரிகை மரக்கன்றுகளை வழங்குவதோடு அதற்குரிய ஏனைய வசதிகளையும் செய்து தருவதாகவும் உறுதியளித்திருந்தார் அத்தோடு காங்கேசன்துறை மற்றும் பரந்தன் இரசாயன தொழிற்சாலைகளை மூட இயக்குவது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

அதோடு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தான் வெகு விரைவில் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாட உள்ளதாக கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மேலும் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் தன்னை இன்று காலை தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்திய நாட்டின் ஜனாதிபதி விரைவாக வடக்கிலுள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை சந்தித்து அவர்களுடைய தேவைப்பாடுகள் மற்றும் அவர்கள் எதிர்பார்க்கும் விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து தன்னை நேரில் வந்து சந்திக்குமாறு அறிவுறுத்தியுள்ளார் அதற்கமைய வடக்கு மாகாணத்தில் உள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களை எதிர்வரும் சனிக்கிழமை மாவட்ட செயலகத்தில் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாட உள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார்.