கொரோனா எதிர்புடலை இனங்காணும் புதிய முறைமையை கண்டுபிடிப்பு

1617070450 4055945 hirunews
1617070450 4055945 hirunews

இலங்கையரான பேராசிரியர் நீலிகா மாலவிகே உள்ளிட்ட ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக நிபுணர் குழு இணைந்து கொரோனா தொற்றின் நோய் எதிர்புடலை இனங்காணும் இலகுவான இரத்த பரிசோதனை முறைமையை  கண்டுபிடித்துள்ளனர்.

விரல் நுனியில் இருந்து எடுக்கப்படும் ஒரு சொட்டு இரத்தத்தினை கொண்டே இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிசோதனை முறைமை மிக விரைவான மற்றும் செயன்முறைக்கு இலகுவானது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை, தாய்வான்,இந்தியா, தாய்லாந்து, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவைச் சேர்ந்த ஆய்வாளர்களும் இந்த ஆய்வில் பங்கேற்றுள்ளனர்.

3,000 குருதி மாதிரிகளை கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக ஒக்ஸ்போர்ட் பல்கலைகழக விசேட நிபுணர்குழுவில் பங்கேற்றிருந்த ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் மருத்துவத்துறை பேராசிரியர் நீலிகா மலவிகே தமது ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.