வவுனியாவில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட கிராம அலுவலர் வைத்தியசாலையில் அனுமதி!

201808010106272281 Anti Graft Law Punish Bribe Givers 7 Years Jail SECVPF
201808010106272281 Anti Graft Law Punish Bribe Givers 7 Years Jail SECVPF

வவுனியாவில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் இன்று மதியம் கைது செய்யப்பட்ட கிராம அலுவலர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கோவில்குளம் கிராம அலுவர் பிரிவின் கிராம அலுவலர் தொடர்பில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து கொழும்பில் இருந்து வருகை தந்த லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் குறித்த கிராம அலுவலர் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட கிராம அலுவலரை மேலதிக விசாரணைக்காக கொழும்பு கொண்டு செல்ல லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், குறித்த கிராம அலுவலர் தமதுக்கு உடல் நிலை சரியில்லை எனவும், நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததையடுத்து குறித்த கிராம அலுவலரை வவுனியா குற்றத்தடுப்பு பிரிவுப் காவல்துறையினரிடம் லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் ஒப்படைந்திருந்தனர்.

இதனையடுத்து இன்று (31.03) மாலை குறித்த கிராம அலுவலர் வவுனியா வைத்தியசாலையில் காவல்துறை பாதுகாப்புடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளும், வவுனியா காவல்துறையினரும் முன்னெடுத்துள்ளனர்.