பாதுகாப்பிற்கு பங்கமில்லாத வர்த்தக நடவடிக்கை

dines
dines

சார்க் உறுப்பு நாடுகளுக்கிடையில், அதன் பாதுகாப்பிற்குப் பங்கமில்லாதவாறு, வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான உறுதியான நடவடிக்கையை எடுக்குமாறு இலங்கை வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன கோரிக்கை விடுத்துள்ளார்.

டிசம்பர் 10 ஆம் திகதி, தாஜ் சமுத்திரா ஹோட்டலில் 35 ஆவது சார்க் பட்டய தினத்தைக் குறிக்கும் நிகழ்வொன்றிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஆசியான் அமைப்புடன் சார்க் அமைப்பினை ஒப்பிட்டு பேசிய அமைச்சர் உலக சனத்தொகையில் 9% இற்கும் குறைவான பங்கை வகிக்கும் ‘ஆசியான்’ பிராந்தியங்களுக்கிடையிலான வர்த்தக எண்ணிக்கை 22% இற்கும் அதிகமாகவுள்ளதாகவும், உலக சனத்தொகையில் 20% இற்கும் அதிகமான பங்கை வகிக்கும் சார்க் அமைப்பு வர்த்தக எண்ணிக்கையானது தற்சமயம் 6% இற்கும் கீழாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

சார்க் பிராந்தியத்திலுள்ள இலங்கை உட்பட்ட சிறிய பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளுக்கு ஆதரவளிப்பதற்காக, வர்த்தக பேச்சுவார்த்தைகளின் போது நெகிழ்வுத்தன்மை வேண்டுமென அமைச்சர் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.