வாழைச்சேனை சமுர்த்தி வங்கியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சித்திரை புத்தாண்டு விற்பனை சந்தை!

03 2
03 2

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சமுர்த்தி அபிமானி 2021 – சித்திரை புத்தாண்டு விற்பனை சந்தை வாழைச்சேனை சமுர்த்தி வங்கியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இச் சந்தையில் உள்ளுர் வியாபாரிகள், சமுர்த்தி உற்பத்தியாளர்களின் உற்பத்திப் பொருட்கள், மற்றும் கூட்டுறவுச்சங்கங்களின் ஊடாக விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டு பிரதேச மக்களின் நன்மை கருதி சகாய விலையில் விற்பனை செய்யப்பட்டது.

சமுர்த்தி வங்கி முகாமையாளர் பா.தேவமனோகரி தலைமையில் நடைபெற்ற இவ் ஆரம்ப நிகழ்வில், பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம், மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் திட்ட மகாமையாளர் அக்பர் பிரதேச செயலக உதவி திட்ட பணிப்பாளர், கணக்காளர் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியில் சமுர்த்தி வங்கி, வலயப் பிரிவுகளின் நெறிப்படுத்தலுக்கமைவாக மக்களின் நலன்கருதி இந்த புத்தாண்டு சந்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.