இது பௌத்த நாடு கமல் குணரட்ன தெரிவிப்பு

kamal kunaredna
kamal kunaredna

இது பௌத்த நாடு. பொது மக்கள் தமது சொந்த மதங்களை பின்பற்றி அனைத்து மதத்தினரும் அமைதியாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்துவது படையினரின் கடமையாகும் என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர், படையினர் முன்னிலையில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்;

விடுதலைப்புலிகள் புத்துயிர் பெற முற்படுவதாகவும், ங்கள் மதத்தினை பிழையாக விளங்கிக்கொண்டுள்ள தீவிரவாத குழுக்கள் நாட்டின் அமைதி நிலையை குழப்புவதற்கு முயற்சிப்பதாகவும் தெவித்துள்ளார்.

முஸ்லிம் தீவிரவாத சக்திகள் நாட்டில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளதுடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு சூத்திரதாரிகள் கண்டறியப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, “இது பௌத்த நாடு. பொது மக்களிற்கு தமது சொந்த மதங்களை பின்பற்றுவதற்கான உரிமையுள்ளது. அனைத்து மதத்தினரும் அமைதியாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்துவது படையினரின் கடமைகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.