வீதியில் பயணிக்கும் பெண்களின் தங்கச் சங்கிலிகளை அறுத்த இருவர் கைது

kaithu
kaithu

மட்டக்களப்பு காத்தான்குடி காவல் பிரிவிலுள்ள தாளங்குடா, பூநொச்சிமுனை பிரதேசங்களில் மோட்டார் சைக்கிளில் சென்று வீதியால் சென்ற பெண்களின் கழுத்தில் இருந்த தங்கசங்கிலிகளை அறுத்து வந்த இரு கொள்ளையர்களை இன்று (09) கைது செய்ததுடன் மோட்டர்சைக்கிள் ஒன்றையும் மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அண்மை காலமாக தாளங்குடா, பூசொச்சிமுனை போன்ற பிரதேசங்களில் வீதிகளால் தனிமையில் செல்லும் பெண்களை கொள்ளையர்கள் இலக்குவைத்து மோட்டர்சைக்கிளில் அவர்களை பின் தொடர்ந்து அவர்களின் கழுத்தில் இருக்கும் தங்கச் சங்கிலியை அறுத்து கொண்டு தப்பியோடி வருகின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது

இந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை தனிமையில் வீதியால் சென்ற பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை மோட்டர்சைக்கிளில் பின் தொடர்ந்து சென்ற கொள்ளையர்கள் அறுத்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் காத்தான்குடி பூசொச்சிமனை பகுதியைச் சேர்ந்த 20,19 வயதுடைய இருவரை கைது செய்ததுடன் அறுக்கப்பட்ட 2 பவுண் தங்கச் சங்கிலி ஒன்றையும் கொள்ளைக்கு பயன்படுத்திய மோட்டார்சைக்கிள் ஒன்றையும் மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்ட குறித்த இருவரும் தாளங்குடா மற்றும் பூநொச்சிமுனை இடம்பெற்ற இரு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்பு பட்டிருப்பதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.