தேர்தலுக்கு பின்னர் கட்சி தலைவர் பதவியை வழங்குவதில் பயனில்லை

ajith perera
ajith perera

பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் கட்சி தலைமை பதவியை சஜித் பிரேமதாசவிற்கு வழங்குவதாக தெரிவிப்பது முட்டாள்தனமான வாதமாகும் என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;

ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய தலைவர் ஒருவர் தேவை என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விடயமாகும். அந்த தலைவர் சஜித் பிரேமதாச மாத்திரமே ஆகும் என்பது முழு நாடும் அறிந்த விடயமாகும்.

கட்சியின் தலைவராக மற்றும் எதிர்க்கட்சி தலைவராக ரணில் விக்ரமசிங்க இருந்துள்ளார். அதனால் தற்போது அவர் அரசியலில் புதிய தலைவர் ஒருவருக்கு சந்தர்ப்பத்தை வழங்கி ஒதுங்கிக்கொள்ள வேண்டும்.

அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக்கும் அளவுக்கு தகுதி இருக்குமானால், சஜித் பிரேமதாசவை கட்சியின் தலைவராக நியமிப்பதற்கு யாருக்கும் பிரச்சினையாக இருக்காது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.