ஆளுங்கட்சி எம்.பி.க்கு 20 மில்லியன் ரூபா நிதி

1 hh 1 2
1 hh 1 2

நாட்டிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் 20 இலட்சம் ரூபா வீதமும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 20 மில்லியன் ரூபா வீதமும் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நிதி ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அபிவிருத்தி பணிகளை எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் 700 வேலை வாய்ப்புக்களை வழங்கவும், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுக்கு 100 வேலை வாய்ப்புக்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பொன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. இச் சந்திப்பில் அரசாங்கத்தின் அனைத்துப் பங்காளிக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது பாராளுமன்றக் கூட்டத் தொடர், தேசிய பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன்போதே ஜனாதிபதி இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி இதன்போது வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.