நாடாளுமன்றத்தில் கைகலப்பு குறித்து ஆராய பிரதி சபாநாயகர் தலைமையில் குழு

thumb Parliament melee Speaker
thumb Parliament melee Speaker

நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை ஆளும் , எதிர்தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தலைமையில் 7 பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகியதன் பின்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை அறிவித்தார்.

நேற்று முன்தினம் (21) ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற சபாபீடத்தில் ஆளும் – எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பு மற்றும் சபைக்கு வெளியில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக திஸ்ஸகுட்டியாராச்சியை ஒருசில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்க முற்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து ஆராய நாடாளுமன்றத்தில் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஏழுபேர் கொண்ட குழுவொன்றை நியமிப்பதாக சபாநாயகர் சபையில் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

தலைவராக ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, உறுப்பினர்களாக சமல் ராஜபக்ஷ, கெஹலிய ரம்புக்வெல்ல, சுசில் பிரேம்ஜயந்த, அநுர பிரியதர்சன யாப்பா, இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார், ரஞ்சித் மத்தும பண்டார, எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.