பொதுப்போக்குவரத்தின் போது சமூக இடைவெளியினை ஏற்படுத்த தொடருந்து திணைக்களம் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கை!

625.500.560.350.160.300.053.800.900.160.90 14
625.500.560.350.160.300.053.800.900.160.90 14

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பொதுப்போக்குவரத்தின் போது சமூக இடைவெளியினை ஏற்படுத்துவதற்காக மேலதிக தொடருந்துகளை சேவையில் ஈடுப்படுத்த எதிர்ப்பார்த்துள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன் பிரதி முகாமையாளர் காமினி செனவிரட்ன கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்தார்.

அதேநேரம், சகல தொடருந்து நிலையங்களிலும், பயணிகளின் உடல் வெப்பநிலை பரிசோதனை மற்றும் தொற்று நீக்கும் பணிகளை மேற்கொள்ளுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொடருந்துகளில் பயணிக்கும் பயணிகளும் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது கட்டாயமானதாகும் என தொடருந்து திணைக்களத்தின் பிரதி முகாமையாளர் காமினி செனவிரட்ன தெரிவித்தார்.

இதேவேளை, ஆசனங்களின் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு அமைய சேவையினை முன்னெடுத்து செல்லும் போது பயணிகளின் அசௌகரியங்களை தவிர்க்கும் நோக்கில் 5000 பேருந்துகளை சேவையில் ஈடுப்படுத்த இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.