பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி!!

1 ere
1 ere

அரசதுறையில் நிலவும் மனிதவள இடைவெளிகளை 54ஆயிரம் பட்டதாரிகளைக் கொண்டு எதிர்வரும் ஜனவரி மாதத்துக்குள் நிரப்புவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் வழிகாட்டலுக்கிணங்க அதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஏற்றுமதி, முதலீட்டு ஊக்குவிப்பு, சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாடளாவிய சகல கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் குறைந்த வருமானமுள்ள குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கும் வேலைத் திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன்போது, எத்தகைய அரசியல் பேதங்களும் இருக்க மாட்டாது என்றும் தகைமைகளுக்கேற்ப ஆட் சேர்ப்பு நியதிகளின்படி அவற்றை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.