அதிகாரப் பகிர்வு : ஜனாதிபதிக்கு பதிலடி கொடுத்த சுமந்திரன்

52849950 2078247012271197 8810409385156149248 n
52849950 2078247012271197 8810409385156149248 n

இன்று யாழில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது.அதிகார பகிர்வு பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் செய்யப்பட வேண்டுமென்ற கோட்டாபய ராஜபக்ஷாவின் கருத்தை நிராகரிக்கிறோம்.

பெரும்பான்மையினரின் ஆதரவுடன் அதிகாரப்பகிர்வு செய்யப்பட வேண்டிய அவசியமில்லை.

பெரும்பான்மை சமூகங்களின் அடக்குமுறையினாலேயே அதிகாரப்பகிர்வு கோரிக்கை எழுகிறது.

அதிகாரப்பகிர்வே இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாகும் என பதிலடி கொடுத்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.

அதிகார பகிர்வை நிராகரித்தும், பெரும்பான்மை சமூகத்தின் ஆதரவின்றி அதை செயற்படுத்த முடியாதென்றும் அண்மைக்காலமாக ஜனாதிபதி தெரிவித்து வரும் கருத்து தொடர்பாக அவர் பதிலளிக்கையில்.

“போர் நடந்தபோது, 13வது அரசியலமைப்பை முழுமையாக அமுல்படுத்துவேன் என்றும், அதற்கும் அப்பாலும் சென்று அதிகார பரவலாக்கலை அர்த்தமுள்ளதாக்குவேன் என மஹிந்த ராஜபக்ச 3 முறை இந்தியாவிற்கு எழுத்துமூல உத்தரவாதம் கொடுத்துள்ளார். பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான அனைத்து கட்சி குழுவின் இடைக்கால அறிக்கையை எடுத்துச் சென்று, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கொடுத்து இதை முழுமையாக அமுல்படுத்துவேன் என வாக்குறுதி கொடுத்தார்.