குற்றவாளிகளை பட்டியல் இடும் நடவடிக்கை!!

3 kd
3 kd

இந்நாட்டிலுள்ள பாதல உலக குழுவினர் உட்பட சகல குற்றச் செயல்களுடனும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்களைப் பட்டியல் இடும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவின் ஆலோசனையின் பேரில் பொலிஸ் தலைமையகத்தில் விசேட குழுவொன்றினால் இந்த குற்றவாளிகளை அடையாளம் காண்டு பட்டியல் இடும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

இதன்படி, நாடு முழுவதும் பல்வேறு பிரதேசங்களில் செயற்பட்டு வரும் பாதாள உலக குழுக்கள் மற்றும் அந்த குழுக்களுடன் தொடர்புடைய சகல குற்றவாளிகளையும் அடையாளம் கண்டு, அவர்கள் தொடர்பான தகவல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

மேலதிகமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள வீதிக் கொள்ளையர்கள், பதிவு செய்யப்பட்ட குற்றவாளிகள் (ஐ.ஆர்.சீ), வீடுகளில் திருடுபவர்கள், போதைப் பொருள் வியாபாரிகள், பாலியல் துஸ்பிரயோகத்துடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் போன்றவர்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு பட்டியல் தயாரிக்கும் நடவடிக்கைகளே தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

இவ்வாறு பட்டியல்படுத்துவதன் ஊடாக குற்றச் செயல்கள் நிகழ்ந்தவுடன், சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும் எனவும் அவ்வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.