மேல் மாகாணத்தில் நேற்றும் 1000க்கும் அதிகமான தொற்றாளர்கள் பதிவு

250px Colombo Lake
250px Colombo Lake

நாட்டில் நேற்றைய நாளில் கொவிட்-19 தொற்றுறுதியான 2,289 பேரில், அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையத்தின் நாளாந்த அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 555 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காலி மாவட்டத்தில் 281 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 236 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 211 பேரும், குருணாகல் மாவட்டத்தில் 218 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 99 பேரும், மாத்தறை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் தலா 79 பேரும் பதிவாகியுள்ளனர்.

கேகாலை மாவட்டத்தில் 73 பேரும், பதுளை மாவட்டத்தில் 20 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 45 பேரும், அநுராதபுரம் மாவட்டத்தில் 35 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 24 பேரும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 45 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் 10 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 71 பேரும், கண்டி மாவட்டத்தில் 38 பேரும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 40 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 35 பேரும், மொனராகலை மாவட்டத்தில் 22 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 12 பேரும் பதிவாகியுள்ளனர்.

பொலனறுவை மாவட்டத்தில் 29 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையத்தின் நாளாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.