பிளாஸ்டிக் குடிநீர் போத்தல் பாவனை தடை- ஜனாதிபதிக்கு பாராட்டு

gota4
gota4

ஜனாதிபதி செயலகத்தில் பிளாஸ்டிக் குடிநீர் போத்தல் பாவனையை தடைசெய்ய மேற்கொண்ட தீர்மானத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிற்கு சுற்றாடல் அமைப்புக்கள் பாராட்டு தெரிவித்துள்ளன.

ஜனாதிபதி செயலகத்தில் நாளாந்தம் இடம்பெறும் கலந்துரையாடல்கள் மற்றும் சந்திப்புகளில் கலந்துகொள்பவர்களின் பாவனைக்காக பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்களை வழங்குவதனை தடை செய்து அதற்குப் பதிலாக கண்ணாடிக் குவளைகளில் நீர் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்தார்.

இதனூடாக இதுவரை காலமும் ஜனாதிபதி செயலகத்தில் நாளாந்தம் உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்கள் சுற்றாடலில் ஒன்று சேர்வது பெருமளவு குறைவடைவதுடன் இதனை ஏனைய அரச நிறுவனங்களிலும் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதியின் இந்த தீர்மானத்திற்கு ‘வனவிலங்குகள் பாதுகாப்பு ஒன்றியம், ‘புவி தோழர்கள்’, ‘தம்பபன்னி இயற்கை கழகம்’ போன்ற அமைப்புக்களும் சூழலியலாளர்களும் சுற்றாடல் நேயமிக்கவர்களும் ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட இந்த தீர்மானத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.