பிரதான நிலப்பரப்பிலிருந்து துண்டிக்கப்படும் யாழ் குடா பகுதி

vlcsnap 2019 12 16 14h57m33s228
vlcsnap 2019 12 16 14h57m33s228

தற்போது இடம்பெற்று வருகின்ற மணலகழ்வினால் யாழ் குடா பகுதியில் அதிகளவில் காணப்படுகின்ற கடல்நீரேரிகள் தாழிறங்கி கடல் நீர் உட்புகுவதன் மூலமாக யாழ் குடா பகுதி நாட்டின் பிரதான பகுதியுடன் துண்டிக்கப்படும் நிலை காணப்படுவதாக வட மாகாண முன்னாள் அமைச்சர் ஐங்கரநேசன் அவர்கள் தமிழ்க் குரலின் அறிவாயுதம் நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;

மணலகழ்வு புவிச்சரிதவியல் அளவைகள், சுரங்கங்கள் பணிகத்தினூடாக இடம்பெற்று வருகிறது, மணலகழ்வின் போது மணல் அகழ்வதற்கான அனுமதிப்பத்திரம், அனுமதி ஆகிய இரண்டும் அவசியமாகும்.

இவ்வாறான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையயிலேயே சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் புதிய அரசாங்கம் மணல் அகழ்விற்கான வழித்தட அனுமதியை நீக்கியமையின் காரணமாக எதிர்பார்த்தளவை விட பகிரங்கமாக மணல் அகழ்வு அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

மணலகழ்வினால் தென்னிலங்கை நிலத்தடி நீரிற்கு பிரச்சினையில்லை. ஆயினும் யாழ் குடா நாட்டு பகுதியில் கடல் நீரேரிகள் அதிகமுள்ள பிரதேசமாகும். இப்பகுதிகளில் மணலகழ்வு இடம்பெறுகின்ற வேளையில் கடல்நீரேரி தாழிறங்கி கடல் நீர் உட்புகுகின்ற வேளையில் யாழ் குடா பகுதி பிரதான நிலப்பரப்பிலிருந்து துண்டிக்கப்படக்கூடிய நிலை காணப்படுவதாக இதன் போது எச்சரிக்கை விடுத்தார்.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் அவர்கள் தமிழ்க் குரலுக்கு வழங்கிய முழுமையான நேர்காணல்: