இன்று மீண்டும் நீதிமன்றில் சம்பிக்க !

20yy
20yy

கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க இன்று மீண்டும் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

2016 ஆம் ஆண்டு இராஜகிரியவில் வீதி விபத்தில் நபர் ஒருவருக்கு பாரிய காயங்களை ஏற்படுத்தியமை மற்றும் அதன் பின்னர் வாகன சாரதியை மாற்றி தப்பிச் சென்றமை முதலான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க நேற்றிரவு கைதுசெய்யப்பட்டார்.

பத்தரமுல்லையில் உள்ள அவரது இலலத்தில் வைத்து இந்தக் கைது இடம்பெற்றது.

இதையடுத்து, கொழும்பு – புதுக்கடை 4ஆம் இலக்க நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை, இன்று வரை விளக்கமறியலில் வைப்பதற்கு நீதவான் உத்தரவிட்டார்.

முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவை கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேறா, கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்ததற்கு அமைய இந்தக் கைது இடம்பெற்றதாக சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி நிஷார ஜயரட்ன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.