பயங்கரவாத தாக்குதல் – இடைக்கால அறிக்கை கையளிப்பு !

2 nu
2 nu

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை ஆணைக்குழுவின் உறுப்பினர்களினால் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளது.

கடந்த 3 மாத காலப்பகுதியில் 30 பேரிடம் குறித்த ஆணைக்குழு வாக்கமூலம் பதிவு செய்துள்ளது.

அத்துடன், 65 பொதுமக்களின் முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளதாகவும் ஆணைக்குழுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கடந்த 6ஆம் மற்றும் 7 ஆம் திகதிகளில் குறித்த ஆணைக்குழுவில் சாட்சி வழங்கியிருந்தார்.

இந்த சாட்சி பதிவுகளை உள்ளடக்கி குறித்த இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.