என் கருத்துக்கள் பிழையென்றால் மாற்று கருத்தை தாருங்கள் – க .வி .விக்னேஸ்வரன்

2 g
2 g

இலங்கை ஒரு பெளத்த நாடு இல்லை என்ற கருத்தை வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் நீதியரசருமான க .வி .விக்கினேஸ்வரன் அண்மையில் தெரிவித்ததை தொடர்ந்து தென்னிலங்கை அமைப்புக்கள் அவருக்கு எதிராக பலவாறான கருத்துக்களை முன்வைத்துக்கொண்டு உள்ளன .
இந்த சந்தர்ப்பத்தில் இன்றய தினம் வாராந்த ஊடகவியலாளர்சந்திப்பில் விக்னேஸ்வரன் பலவாறான கருத்துக்களை முன்வைத்துள்ளார் அதன் விரிவான பகுதி இங்கே இணைக்கப்படுகிறது .

கேள்வி:- தென்னிலங்கையில் உங்களுக்கு எதிராக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக உங்களைக் கைது செய்ய வேண்டுமென்று கோரி வருவதை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:- என்னிடம் கேள்வி ஒன்று தரப்பட்டது. அந்தக் கேள்விக்கான பதிலை நான் ஆங்கிலத்தில் எழுதி அனுப்ப அவற்றைப் பத்திரிகைகள் பிரசுரித்தன.

அதன் காரணமாக அதை பொது மக்கள் வாசித்து தென்னிலங்கையிலே முக்கியமாக சிங்கள மக்கள் கொதிப்படைந்திருக்கின்றார்கள், கோபம் கொண்டுள்ளார்கள் என்று தெரிகின்றது. இதிலே கோபம் கொள்ள வேண்டிய அவசியம் எதுவும் இல்லை.

நான் கூறுவது எனக்குத் தெரிந்த வரலாற்றின் அடிப்படையிலேயே நான் அறிந்து கொண்ட தரவுகளிலிருந்து அந்த கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றேன்.

என் கருத்துக்கள் பிழையென்று யாராவது நினைத்தால் அதற்கான மாற்றுக்கருத்துக்களை அவர்கள் தரலாம். ‘நீங்கள் அவ்வாறு கூறியிருக்கின்றீர்கள் உண்மையில் வரலாற்றின் படி இவ்வாறு தான் நடந்துள்ளது, ஆகவே அது இது தான் வரலாறு’ என்று எனக்கு எடுத்துக்கூறலாம்.

அவ்வாறு ஏதும் கூறாமல் ‘அவரை கைது செய்யுங்கள்; அவருக்கு அடியுங்கள்; அவருடன் வன்முறையில் ஈடுபடுங்கள்’ என்றெல்லாம் கூறுவது ஏதோ தங்களுடைய உண்மைகள் எல்லாம் வெளியில் வரக்கூடுமோ என்றதொரு பயத்தின் நிமித்தமே அவ்வாறு நடந்து கொள்கின்றார்கள் போன்று எனக்குத் தெரிகின்றது.

நான் கூறியிருப்பது உண்மையென்பது என்னுடைய கருத்து. உண்மையைக் கண்டு அவர்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அந்த உண்மை வெளிவந்தால் தாங்கள் இதுவரை காலமும் பொய்மையை எவ்வாறு வெளிப்படுத்தி வந்தார்களோ அந்த பொய்மை அழிந்துவிடும் என்றதொரு ஏக்கத்தில் அவர்கள் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்களோ நான் அறியேன்.


ஆனால் எது எவ்வாறாக இருப்பினும் நான் கூறுவது உண்மையென்றால் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். அது பிழை என்றால் அவர்கள் அதற்குத் தோதான எதிர்க்கருத்துக்களைத் தரவேண்டும். அல்லது நான் கூறியவை பொய் என்று அவர்கள் நினைப்பதால் ‘நாங்கள் அதைப் பற்றி எதுவுமே பேச வேண்டிய அவசியம் இல்லையே’ என்று வாளாதிருக்கலாம்.

இவற்றையெல்லாம் விட்டுவிட்டு அவர்கள் என்னை கைது செய்ய வேண்டும் என்று கூறுவது அவர்களுடைய உள்ளெண்ணங்களை படம்பிடித்துக் காட்டுகிறது. ஏதோவொரு பயத்தினால், அதாவது தங்களுடைய க.படங்கள் வெளிப்பட்டு விடுமோ என்ற பயத்தின் நிமிர்த்தமாக அவர்கள் இவ்வாறு நடந்துகொள்கிறார்களோ என்று என்னை எண்ண வைக்கின்றது.


ஆகவே இவ்வாறான கைதுகளும் என்னை விமர்சிப்பதும் தேவையற்றது என்று தான் நான் பார்க்கின்றேன். ஒருவர் தனது கருத்துக்களை வெளிப்படுத்துவது ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு விடயம். நான் வன்முறையைச் சார்ந்து கருத்துக்களை வெளிப்படுத்தவில்லையே.

ஆனால் உண்மையை தொடர்ந்து நான் கூறிக்கொண்டு தான் வருவேன்.
கேள்வி:- உங்களது தலைமையில் புதிய கூட்டு ஒன்று உருவாக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

அந்த முயற்சிகள் தற்போது எந்தக் கட்டத்தில் இருக்கின்றது?
பதில்:- அது உண்மைதான். கொள்கையளவிலே பலர் ஒன்றுசேர்ந்து புதிய கூட்டொன்றை அமைக்க நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருக்கின்றோம்.

அது அநேகமாக இந்த மாதக் கடைசிக்கு முன்னர் ஒரு நிச்சயமான நிலைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கின்றோம். கொள்கைகளிலே எங்களுக்குள் பிரச்சினை இல்லை. அவற்றிலே எங்களுக்குள் புரிந்துணர்வு இருக்கின்றது.

ஆனால் நடைமுறையில் நடந்துகொள்ள வேண்டிய விடயங்களிலே எவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம். தேர்தல் காலத்திலே என்னென்ன விடயங்கள் எங்களால் பரிசீலிக்கப்படவேண்டும் என்பது சம்பந்தமாக நாங்கள் ஒரு ஆவணத்தைத் தயாரித்துக்கொண்டிருக்கின்றோம்.

வெகு விரைவில் அது தயாரிக்கப்பட்டுவிடும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பு.
கேள்வி:- சமகால அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற நடவடிக்கைகளை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
பதில்:- சமகால அரசாங்கம் என்று நாங்கள் கூறும்போது புதிய ஜனாதிபதியைத் தான் நாங்கள் குறிப்பிட வேண்டியிருக்கின்றது.

ஏனென்றால் அவருடைய தேர்வின் பின்னர் தான் புதிய அரசாங்கம் அல்லது சமகால அரசாங்கம் பதவிக்கு வந்திருக்கின்றது. பதவியை ஏற்றுக்கொண்டது முதல் ஜனாதிபதி அவர்கள் எடுத்துவந்திருக்கின்ற பல நடவடிக்கைகள் எங்களுக்கு மகிழ்ச்சியை ஊட்டுகின்றன.

உதாரணமாக ஒரு ஜனாதிபதி அவர்கள் முன்னர் வெளியிலே போகும் போது பல வாகனங்கள் அவரின் பின் செல்வன. பல இராணுவத்தினர் செல்வார்கள். அவற்றையெல்லாம் கட்டுப்படுத்தியிருக்கின்றார் புதிய ஜனாதிபதி. அத்துடன் ஜனாதிபதி செல்கின்றார் என்பதற்காக போக்குவரத்தை நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியிருக்கின்றார்.

தானும் சாதாரண மக்கள் போன்று வழக்கமான போக்குவரத்தின் ஊடாக செல்ல வேண்டும் என்ற ஒரு கருத்தையும் முன்னெடுத்து இருக்கின்றார்.


இவ்வாறான பல நல்ல விடயங்களை இதுவரை காலமும் எங்களுடைய தலைவர்கள் முன்னெடுத்து வரவில்லை. பந்தாகாட்டி வந்தார்கள். சில பாராளுமன்ற தமிழ் அங்கத்தவர்கள் கூட காற்றில் பறந்து கொண்டிருந்தார்கள். தரையில் இறங்க மறுத்திருந்தார்கள். இப்பொழுது இவர்களுக்கெல்லாம் ஜனாதிபதி முன்மாதிரியாக நடந்து பாடம் கற்பித்துக்கொண்டிருக்கின்றார்.


தற்போது ஜனாதிபதி அவர்கள் தமக்கென விதித்திருக்கும். கட்சிப்பாடுகளை நாங்கள் வரவேற்கின்றோம். ஆனால் அதே நேரத்திலே அவருக்கு வாக்களித்திருக்கும் பல சிங்கள மக்களினுடைய எதிர்பார்ப்பின் காரணமாகவோ என்னவோ சில ஒவ்வாத நடவடிக்கைகளை அவர் தமிழர்கள் சம்பந்தமாக எடுக்க இருக்கின்றார் போல் தெரிகின்றது.

அவருடைய கருத்துகள் சம்பந்தமாக நான் விரைவிலேயே என்னுடைய கருத்தை வெளியிடுவேன். ஆனால் தமிழ் மக்களுக்கு அதிகாரப்பரவலாக்கம் தேவையில்லையென்ற அவருடைய கருத்து எம்மால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. அதிகாரப் பரவலாக்கம் தேவை எமக்கே. சிங்கள மக்களுக்கு அல்ல. அவரின் கூற்றை அதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.

கடந்த 100 வருட காலமாகத் தமிழ் மக்கள் தங்களுடைய உரிமைகளுக்காக போராடுகின்றார்கள்.

அவர்களுக்கு அதிகாரப்பரவலாக்கம் தேவையில்லை பொருளாதார அபிவிருத்தியே போதும் என்று கூறுவது அவருக்கு உண்மையாகவே தமிழ் மக்களின் பிரச்சினை தெரியாதிருகின்றது அல்லது தெரிந்து கொண்டும் மறைக்கப் பார்க்கின்றாரோ என்று எண்ண வேண்டி இருக்கின்றது.


ஆகவே சமகால அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை ஒரு பக்கம் பார்த்தால் நன்மைகள் சிலவற்றைக் காண்கின்றோம். மறுபக்கம் பார்த்தால் மக்களுடைய முக்கியமாக தமிழ் மக்களுடைய வருங்காலம் பற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டியதொரு கட்டத்திற்கு அவர் கொண்டுவந்திருப்பதை நாங்கள் அவதானிக்கி;ன்றோம்.
கேள்வி:- தமிழ்க்கட்சிகளுக்குள் ஏற்பட்டு வரும் பிளவுகள், புதிய கட்சிகள் உருவாக்கம் தொடர்பில் உங்கள் பார்வை எவ்வாறாக உள்ளது?


பதில்:- இந்த பிளவுகள் ஏற்பட்டதற்கு காரணம் 2013 அளவில் தயாரிக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனங்களுக்கு முரணான விதத்திலே த.தே.கூ.ப்பின் தலைமைத்துவம் நடந்துகொண்டதால். அக்கூட்டமைப்பை விட்டு ஒவ்வொருத்தராக வெளியே வரவேண்டிய அவசியம் அவ்வாறான காரணங்களாலேயே ஏற்பட்டிருக்கின்றது.

இந்தப் பிளவுகள், புதிய கட்சிகள் உருவாக்கம் போன்றவை எல்லாம் தேர்தல் விஞ்;ஞாபனத்தின் அடிப்படையிலே எதை எதனை மக்கள் எதிர்பார்த்தார்கள் என்பதை தலைமைத்துவம் மறந்து தான்தோன்றித்தனமாக இதுவரை காலமும் நடந்துவந்ததன் பின்விளைவுகளாவன.


அண்மையில் திரு.சம்பந்தன் அவர்கள் ‘கற்பனை இலக்குகள்’ என்று தாங்களே தயாரித்த விஞ்ஞாபனத்தில் காணும் இலக்குகளை வர்ணித்துள்ளார். கற்பனைகளைக் கட்சிகளின் கருத்தாக, இலக்காக விஞ்ஞாபனங்களில் மக்கள்முன் வைத்தது ஏன் என்பது பற்றி அவர் விளக்கம் அளிக்கவில்லை.

அவர் கூறும் கற்பனைகளை நாம் அடையாவிட்டால் இலங்கையில் பறங்கியருக்கு நடந்ததே எமது வட கிழக்குத் தமிழ் மக்களுக்கும் நடக்கும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். கற்பனைகளை தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்ளடக்காமல் நாங்கள் நு.P.னு.P. ஐப் பின்பற்றப் போகின்றோம் என்று என்னிடம் ஐயா அவர்கள் 2013 ல் கூறியிருந்தாரானால் நான் நலமாக என் கொழும்பு வீட்டிலேயே தங்கியிருந்திருப்பேன்.

அரசியலுக்கு வந்திருக்கமாட்டேன்.
ஆகவே கொள்கை அடிப்படையிலே கட்சிகள் ஒருங்கிணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. துருவமயமாக்கத்திற்கு முதற்படியாகத்தான் இந்தப் பிளவுகளையும் புதிய கட்சிகளின் உருவாக்கத்தையும் நான் காண்கின்றேன்.

அதாவது Pழடயசணையவழைn என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். கொள்கை ரீதியாக நம்மவர்கள் தங்களுக்குள்ளேயே முரண்பட்டு நிற்கும்போது இந்த Pழடயசணையவழைn ஏற்படும். ஒரே வித இறகுகளைக் கொண்ட பறவைகள் இனி ஒன்றிணைய வேண்டும். அவ்வாறான இணைப்புக்கு முன்பு தான் இந்த பிளவுகளும் புதிய கட்சி உருவாக்கங்களும் நடந்துகொண்டிருக்கின்றன.

வெகுவிரைவிலே அவையெல்லாம் ஒரு நிலைக்கு வந்துவிடுவன. அப்பொழுது ஒவ்வொரு கட்சியனரதும் குறிக்கோள்கள், கொள்கைகள் தெரிய வருவன.

அவற்றை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா இல்லையா என்பதைப் பற்றி மக்கள் தான் தீர்மானித்து வாக்குத்தர வேண்டிய அவசியம் ஏற்படும். ஆகவே அதுவரையிலே நாங்கள் எங்களுடைய கொள்கை சார்ந்த நடவடிக்கைகளிலே தொடர்ந்து நடந்துகொண்டு வர இருக்கின்றோம்.

மக்களினுடைய வாக்குகளைக் கண்டதன் பிற்பாடுதான் எங்களுக்குத் தெரிய வரும் இந்தப் பிளவுகளும் புதிய கட்சிகள் உருவாக்கமும் சரியான வழியில் சென்றனவா? இல்லையா என்று.
கேள்வி :- ‘இலங்கை சிங்கள தேசம்’ என்ற கருத்து தென்பகுதியில் வலுப்பெற்றுவருகின்றது. அப்படியாயின் தமிழரின் இடம் என்ன என நீங்கள் நினைக்கின்றீர்கள்?


பதில் :- இது பற்றி நான் ஏற்கனவே ஆங்கிலத்தில் பதில் அளித்துவிட்டேன். அதைத் தமிழிலும் மொழிபெயர்த்து சில பத்திரிகைகள் பிரசுரித்துள்ளன. சுருங்கக் கூறுவதெனில் இலங்கை சைவத் தமிழ் மக்களுக்கே உரியது. புத்தர் காலத்திற்கு முன்பிருந்தே சைவத் தமிழர்கள் இலங்கையில் இருந்து வந்துள்ளார்கள். முதலில் பௌத்தத்திற்கு மாறியவர்களும் அவர்களே.

சிங்களமொழி அப்போது பிறந்திருக்கவில்லை. கி.பி. 6ம், 7ம் நூற்றாண்டுகளில்த் தான் சிங்களம் என்பது ஒரு மொழியாகப் பரிணமித்தது. ஆகவே அந்த மொழி வருவதற்கு முன் இலங்கையில் சிங்களவர் இருக்கவில்லை.

சுமார் 1300 அல்லது 1400 வருடங்களாகத்தான் சிங்களம் ஒரு மொழியாக பேசப்பட்டு வருகின்றது. அதற்குமுன் தமிழ் மொழியுடன் பாளிமொழி இருந்தது. துஷ்டகாமினி ஒரு பௌத்த தமிழன். எல்லாளன் ஒரு சைவத் தமிழன். அந்தக் காலத்தில் சிங்களமொழி இருக்கவில்லை. ஆகவே துட்டகைமுனுவைச் சிங்களவர் என்று அடையாளம் காட்டுவது எந்த முறையிலே சரி என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.


கேள்வி:- இந்திய குடியுரிமை இலங்கை அகதிகளுக்கு வழங்காமை பற்றி உங்கள் கருத்தென்ன?


பதில்:- இந்தியாவில் இருக்கும் எங்களுடைய அகதிகள் பற்றி கேள்வி கேட்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் இருக்கும் தமிழ்; அகதிகளுக்கு குடியுரிமை இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பலர் கூறுகின்றார்கள்.

அது அவர்கள் மனிதாபிமான அடிப்படையிலே கோரும் ஒரு கோரிக்கை. நாங்கள் அதற்கு எதிர்ப்பில்லை. ஆனால் வடகிழக்கு மாகாணங்களிலே தமிழ் மக்களினுடைய தொகை குறைந்து கொண்டு போகின்றது. சுமார் ஒரு இலட்சம் பேர் எங்களுடைய மக்கள் இந்தியாவிலே கடந்த 20, 30 வருடங்களாக இருந்து கொண்டு வந்திருக்கின்றார்கள்.

அவர்கள் திரும்பி எங்களுடைய நாட்டுக்கு திரும்பி வர வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பு.

அவ்வாறு திரும்பி வரவில்லையென்றால் அவர்களுடைய அந்த வெற்றிடம் வெளிமாகாணங்களில் இருந்து வரும் மக்களால் நிரப்பப்படும்.

அது எந்தளவிற்கு தமிழ் மக்களினுடைய நீண்டதொடர் இருப்பை உறுதிசெய்யும் என்று எங்களுக்குச் சொல்லமுடியாது. ஆகவே என்னுடைய கருத்து என்னவென்றால் இந்தியாவில் இருக்கும் எங்களுடைய அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை அளிக்கப்பட வேண்டும்.

ஏனென்றால் அவர்களுக்கு பல தொடர்புகள் இந்தியாவிலே இருக்கின்றன. முக்கியமாக அவர்களுடைய குழந்தைகளின் அல்லது பிள்ளைகளின் கல்வி சம்பந்தமான தொடர்புகள்.

நான் இது சம்பந்தமாக சுமார் 3 வருடங்களுக்கு முன்னர் இங்கிருந்த இந்திய உயர்ஸ்தானிகருடன் பேசியிருந்தேன். அப்போது அவர் ஒரு உத்தரவாதம் தந்தார்.

‘உங்களுடைய மக்கள் திரும்பி வருவதாக இருந்தால், அவர்களுடைய பிள்ளைகளுக்கு கல்வி வசதிகள் அங்கு தேவை என்று சொன்னால், அவர்களுக்கு ர்ழளவநட குயஉடைவைல வழங்கி எங்கெங்கே அவர்கள் படிக்கின்றார்களோ அங்கு தொடர்ந்து படிப்பதற்கு நாங்கள் இடமளிப்போம்.

தாய், தந்தையர்கள் திரும்பி இங்கு வரலாம். பிள்ளைகள் தங்களுடைய படிப்பை முடித்துக்கொண்டு வரலாம்’ என்றெல்லாம் கூறியிருந்தார். ஆகவே அப்பொழுது தொடக்கம் எமது மக்கள் திரும்ப வர வேண்டும் என்பது சம்பந்தமாக நாங்கள் பேசிக்கொண்டு தான் வருகின்றோம். திரு.சந்திரஹாசன் இங்கு வரும் போது நான் இதுபற்றி குறிப்பிட்டிருந்தேன்.

ஆனால் அங்கு எங்களுடைய மக்கள் 20, 30 வருடங்கள் தொடர்ந்து இருந்த காரணத்தினால் அங்கேயே இருக்க விரும்புகின்றார்கள் போல் தெரிகின்றது. ஆனால் நாங்கள் இந்திய அரசாங்கத்தோடு சேர்ந்து அவர்கள் திரும்பி வருவதற்கான சகல ஆயத்தங்களையுஞ் செய்து கட்டமைப்புக்களை உருவாக்கி அவர்களை வரவேற்க வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்து. ஆனால் அவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை அளித்தால் அங்கும் தமது காரியங்களை அவர்கள் செய்து கொண்டு போகலாம். இங்கும் அவர்கள் வந்து எங்களுடைய தமிழ் மக்களின் தொகையை மீட்டுத் தருவார்கள் என்பது என்னுடைய கருத்து.


கேள்வி:- இப்போதைய கடற்தொழில் அமைச்சர் ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்டிருந்தார். வடக்கு மாகாண சபையில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் சம்பந்தமாக விசாரணை நடத்துவதற்கு தற்போது சிறப்பு விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமிக்கவுள்ளதாகக் கூறியிருந்தார். இது சம்பந்தமாக உங்களுடைய கருத்து.
பதில்:- இதுவரையில் அதுபற்றி நான் கேள்விப்படவில்லை. அவ்வாறான ஏதாவது ஒரு கொமிஷன் நியமிக்கப்பட வேண்டும் என்றால் தாராளமாக செய்யட்டும்.

ஏற்கனவே சில இளைப்பாறிய நீதிபதிகள் கொண்ட குழு ஒன்றை அவற்றைப் பற்றி ஆராய்ந்து தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து கொண்டிருந்தார்கள்.

இன்னும்மொரு குழுவை நியமிப்பது என்றால் ஒன்று அதற்குரிய காரணங்களை அவர்கள் கூறவேண்டும். இரண்டு இனிவரப்போகின்றவர்கள் அந்த முன்னைய நீதிபதிகளுக்கு மேலான தரமுடையவர்கள் என்று கூறவேண்டும். அவ்வாறு எப்படிக் கூறப்போகின்றார்கள் எனத் தெரியவில்லை.

இவ்வாறான ஆணைக்குழுவிற்கான அவசியம் என்னவென்றும் எனக்கு விளங்கவில்லை. அது பற்றி என்னால் வேறு ஒன்றும் கூறமுடியாது.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முன்னாள் முதலமைச்சர்
வடமாகாணம்
செயலாளர் நாயகம்
தமிழ் மக்கள் கூட்டணி