குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி!

Death body 720x450 1 1
Death body 720x450 1 1

பதுளை – ஹாலிஎல பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி தோட்டத் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹாலிஎல ரொசட் தோட்டத்தைச் சேர்ந்த குறித்த தொழிலாளி, நேற்றைய தினம், உனுகொல்ல தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்தபோது, குளவி கொட்டுக்கு இலக்கானதாக ஹாலிஹெல காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்தார்.

குளவி கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்த அவரின் சடலம், பதுளை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது