விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே முக்கிய நாள் என்கிறார் முரளீதரன்!

muralitharan
muralitharan

2009 இல் யுத்தம் முடிவிற்கு வந்த விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே தனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் என்று இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார்.

பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் கொழும்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ள முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் இலங்கையை அரசியல் அனுபவமிக்க அரசியல்வாதி ஒருவரே ஆட்சிசெய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக அனுபவமிக்க அரசியல்வாதி ஒருவரே தெரிவு செய்யப்படவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர்களும் ஏனைய துறைசார் வல்லுனர்களும் நாட்டிற்கு தலைமை தாங்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சிலர் வர்த்தகர்கள் மீதும் ஏனையவர்கள் மீதும் நம்பிக்கை வைக்கின்றனர் ஆனால் மக்களின் பிரச்சினைகளை அரசியல் அனுபவம் உள்ள அரசியல் ரீதியில் முடிவெடுக்க கூடிய ஒருவராலேயே தீர்க்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.