உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விட்டு சம்பிக்கவுக்கு ஏன் முன்னுரிமை !

3 rtt
3 rtt

அர்ஜுன் மஹேந்திரனைக் கைது செய்யும் வரையில் மத்திய வங்கி பிணை முறி தொடர்பாக விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அடுத்த கட்ட விசாரணைகளை முன்னெடுக்க முடியாதுள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மம்பில தெரிவித்துள்ளார்.

பிவிதுரு ஹெல உறுமய செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

மத்திய வங்கி ஊழலின் போது அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பாலமாக அமைந்தவர்தான் முன்னாள் மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜுன் மஹேந்திரன். இதனால், அவரைக் கைது செய்யாமல் அவருடன் இருந்த அரசியல் தொடர்புகளை அறிந்துகொள்ள முடியாதுள்ளது.

கடந்த அரசாங்கத்தில் முன்னாள் அமைச்சர் பாட்டளியினதும் உதவியுடன் தான் அர்ஜுன் மஹேந்திரன் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றார். அவரை சிங்கப்புரிலிருந்து வெளியேற்றுமாறு இலங்கை அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அதனை செயற்படுத்தும் வரையில் முன்னோக்கிச் செல்ல முடியாது.

கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் இப்பொழுதுதான் உண்மைகள் வெளிவர ஆரம்பித்துள்ளன. பாட்டளி எம்.பி.யின் வழக்கு விசாரணை நிறைவடைந்து காணப்பட்டது.

அந்த வழக்கில் பொலிஸார் தகவல்களை மறைத்து நீதிமன்றத்துக்கு முன்வைத்திருந்தமைதான் இடம்பெற்றிருந்தது. அந்த விசாரணைகளை முன்னெடுத்த போதுதான் பாட்டளி சம்பிக்க ரணவக்க எம்.பி. யை அவசரமாக கைது செய்ய முடிந்தது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.