இதே அமைச்சில் நீடிப்பேன் என டக்ளஸ் நம்பிக்கை தெரிவிப்பு

douglas
douglas

ஒருநாள் அமைச்சராக இருந்தபோதே பல விடயங்களை தன்னாள் பல விடயங்களை செய்வதற்கு முடிந்ததாகவும் தேர்தலின் பின்னரும் அமையவுள்ள இதே ஆட்சியிலும் இதே அமைச்சில்தான் நீடிப்பேன் என கடற்தொழில், நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;

அமைச்சு பதவியிலிருந்து விலக வேண்டுமென சுமந்திரன் தெரிவித்தது அரசியல் நோக்கமுடையது என்றும் அக்கோரிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது எனறும் அந்த கோரிக்கையில் நியாயம் உள்ளதா என்பதற்கு அப்பால் அது அரசியல் நோக்கமுடையது என தெரிவித்தார்.

இன்றுள்ள ஆட்சியாளர்களை நான் கொண்டு வரவில்லை. நான் அதில் பங்கெடுத்துள்ளேனே தவிர, இந்த ஆட்சியை நான் கொண்டு வரவில்லை. பெரும்பான்மையான மக்கள்தான் இந்த ஆட்சியை கொண்டு வந்துள்ளனர். என்னுடைய தேசிய நல்லிணக்கம் காரணமாக அதில் எனக்கு இடம் கிடைத்தது.

எனக்கு இந்த ஆட்சியில் பங்கெடுக்கும் விருப்பமிருக்கவில்லை. காரணம், நான் தேர்தலில் வெற்றியடையவில்லை. ஆனால் அமைச்சு பதவியேற்குமாறு பலர் வற்புறுத்தினார்கள். கொழும்பிலுள்ள பெரும்பாலான தமிழ் ஊடகவியலாளர்கள், மதப் பெரியவர்கள், புத்திஜீவிகள், பொதுமக்கள், எமது கட்சியினரின் அழுத்தம் காரணமாக நான் பதவியேற்றேன்.

என்னை பதவிவிலக கோரும் தகுதி சுமந்திரனிற்கு இருக்கிறதா இல்லையா என்பதற்கு அப்பால், அவர் உள்நோக்கமுடன் அதை சொன்னார்.

தமிழ் மக்கள் தொடர்ந்து தவறாக வழிநடத்தப்படுவார்களாக இருந்தால், கடவுளாலும் காப்பாற்ற முடியாது. வரவுள்ள சந்தர்ப்பங்களை தமிழ்மக்கள் சரியாக பயன்படுத்த வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.