சவுதியில் புகைப்பிடிப்பவர்களின் தொகை அதிகரிப்பு

smoking
smoking

சவுதி மக்கள் தொகையில் 12.3 வீதமானோர் புகைப்பிடித்தல் பழக்கம் உள்ளவர்கள் என ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

புகைத்தல் எதிர்ப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் புகைபிடிப்போர் தொகை அதிகரித்துள்ளதாகவும் புகை பிடிப்பதை விடுவதற்கு விருப்பம் கொண்டவர்களும் சவுதியில் அதிகரித்துள்ளதாகவும் அத்தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

சவுதி மக்களில் புகைப்பிடிப்பவர்களையும், அந்நாட்டில் தொழிலுக்காக வந்துள்ள புகைத்தல் பழக்கமுள்ள வெளிநாட்டவர்களையும் பங்குகொள்ளச் செய்யும் வகையில் புகைத்தல் எதிர்ப்பு நிகழ்ச்சிகளை இலவசமாக சவுதி அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.