கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை- 89 வழக்குகள் பதிவு

rice 1
rice 1

கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசியை விற்பனை செய்த 89 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஆராய்வதற்காக நேற்று முன்தினம் முதல் நேற்று வரை ஆயிரத்து 430 வர்த்தக நிலைங்களில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கட்டுப்பாட்டு விலையை மீறி, அரிசி விற்பனையில் ஈடுபட்ட 512 வர்த்தக நிலையங்கள் இதன்போது அடையாளங் காணப்பட்டுள்ளன.

இதன்படி, அவற்றில் 89 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ள அதேவேளை ஏனைய நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

நாட்டரிசி மற்றும் சம்பா ரக அரிசிகளுக்கு, 98 ரூபா அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டு, நுகர்வோர் விவகாரங்கள் அதிகார சபையினூடாக, அண்மையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.