ரணில்- சஜித் பேச்சு ஒத்திவைக்கப்பட்டது!

ranil sajith
ranil sajith

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அதன் துணைத் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையே நடைபெறவிருந்த ஒரு சந்திப்பு, பிரேமதாசவின் வேண்டுகோளின் பேரில் மறுபரிசீலனை செய்யப்பட்டது. அதன்படி பேச்சு நாளை நடைபெற வாய்ப்புள்ளது என்று பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. இதில் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதில் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவருக்கும் துணைக்கும் உள்ள வேறுபாடுகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை கூட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளராக போட்டியிடுவதற்கான தனது விருப்பத்தை விக்ரமசிங்க வெளிப்படுத்திய போது, ​​இறுதி முடிவு கட்சியின் செயற்குழுவில் நியமிப்பதாக அவர் கூறினார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரை சந்தித்த பல மூத்த உறுப்பினர்கள், சஜித் பிரேமதாசாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், ஐக்கியதேசியக்கட்சியின் வேட்பாளராக யார் இருக்க வேண்டும் என்பதில் ஏற்பட்டுள்ள வேறுபாடுகளை தீர்க்கவும் அவரை வலியுறுத்தியதை அடுத்து இருவருக்கும் இடையே இச் சந்திப்பு திட்டமிடப்பட்டது.

இந்நிலையில் பிரேமதாச வேட்புமனுவை வெல்வதற்காக ஒரு பொது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.