ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து சஜித்தை நீக்க நடவடிக்கை!

sajith and ranil 1
sajith and ranil 1

ஐனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதில் ஐக்கிய தேசிய கட்சிக்குள் தற்போது வரையில் முறுகல் நிலை காணப்படுகிறது.

கட்சியின் பிரதித்தலைவரான சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக நியக்கவில்லை என்றால் அவர் வேறு கட்சியில் வேட்பாளராக போட்டியிடத் தீர்மானத்துள்ளார் எனவும் அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக சுற்றுத்லாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

அவ்வாறு மாற்றுக் கட்சியில் இணைந்து சஜித் போட்டியிட்டால், ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து அவர் நீக்கப்படுவார் என சிங்கள தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதில் UNP தலைவருக்கும் துணைக்கும் உள்ள வேறுபாடுகள் தொடர்பில் நாளை நடைபெறவுள்ள பேச்சுக்களில் ஆராயப்படவுள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.