மட்டக்களப்பில் ‘உயிரைக் காப்போம்’ எனும் தொனிப் பொருளில் பல்வேறு வேலைத் திட்டங்கள்!

01 2
01 2

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு பெருகும் இடங்களை கட்டுப்படுத்தி ‘உயிரைக் காப்போம்’ எனும் தொனிப் பொருளில் பல்வேறு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள ஒன்பது கிராம சேகவர் பிரிவுகளில் கிராமிய டெங்கு விழிப்புணர்வுக் குழு உருவாக்கும் நிகழ்வு கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.ரி.நஜீப்கான் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஒன்பது கிராம சேகவர் பிரிவுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட கிராமிய டெங்கு விழிப்புணர்வுக் குழு உறுப்பினர்களுக்கு சீருடைகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், பாவனையற்ற கிணறுகளுக்கு வலை மூடிகள் போடப்பட்டுள்ளது.

அத்தோடு டெங்கு பெருகும் இடங்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் அம்கோர் நிறுவன கள உத்தியோகத்தர் எஸ்.ருசாந்தி வளவாளராக கலந்து கொண்டு கருத்துகளை வழங்கினார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பதினான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் அம்கோர் நிறுவனத்தினால் கிராம சேகவர் பிரிவுகளில் கிராமிய டெங்கு விழிப்புணர்வுக்குழு உருவாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் அம்கோர் நிறுவன திட்ட உத்தியோகத்தர் ஏ.செல்வக்குமார், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.