672 துப்பாக்கி ரவைகளுடன் ஒருவர் கைது

kaithu
kaithu

சிறையிலுள்ள, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சுபுன் தரங்க என்பவரின் உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் சந்தேக நபரின் வீட்டில் புதைக்கப்பட்டிருந்த  டி-56 ரகத்தைச் சார்ந்த 672 துப்பாக்கி ரவைகள் காவல்துறை விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நபர் பெலிஅத்த – சிரிபுர கலகம பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதான ஒருவர் என விசாரணையின் போது தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.