கோட்டாவை எச்சரித்துவிட்டு சென்ற சம்பந்தர் !

2 dew
2 dew

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள புதிய சூழலில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இந்தியாவுக்கு நேற்று முதல் தடவையாகச் சென்றுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் அங்கு சென்றுள்ளார். அந்தப் பயணத்துக்கு முன்பே அவர் சிலவிடயங்களை வெளியிட்டுள்ளார் .

“இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச பதவியேற்ற நாள் முதல் இந்த அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் சர்வதேச நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் உற்றுநோக்கி வருகின்றன. அரசியல் ரீதியிலோ அல்லது தனிப்பட்ட ரீதியிலோ எவரையும் கோத்தாபய அரசு பழிவாங்கக்கூடாது. அவ்வாறு இந்த அரசு செய்தால் சர்வதேசம் சும்மா விடாது. அதற்குரிய விபரீத விளைவுகளை இந்த அரசு சந்திக்க வேண்டியே வரும்.”என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நாட்டில் நல்லிணக்கத்தை நிலைநாட்டும் வகையில் அவர்கள் செயற்பட வேண்டும். தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் காணும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட வேண்டும்.

அதைவிடுத்துவிட்டு மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் அரங்கேறிய அருவருக்கத்தக்க சம்பவங்களில் கோத்தாபய அரசு ஈடுபடக்கூடாது.

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர்களையோ, ராஜபக்ச குடும்பத்தை விமர்சித்தவர்களையோ, மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் மற்றும் கொலைக்குற்றங்களை அம்பலப்படுத்தியவர்களையோ கோட்டாபய அரசு அரசியல் ரீதியில் அல்லது தனிப்பட்ட ரீதியில் பழிவாங்கக்கூடாது. அவ்வாறான செயலில் இந்த அரசு ஈடுபட்டால் சர்வதேசம் சும்மா விடாது” – என்றார்.