முல்லைத்தீவில் 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி தேவை

Mullai
Mullai

முல்லைத்தீவு மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் தடுப்பூசியினை பெற தகுதியுடையவர்களாக 60 ஆயிரம் பேர் வரை காணப்படுவதாக பிராந்திய சுகாதாரசேவைகள் பணிமனையினர் தெரிவித்துள்ளனர்.

மாவட்டத்தில் 30 அகவைக்கு மேற்பட்டவர்கள் கர்பிணிகள்,வயோதிபர்கள், உள்ளிட்ட ஆண் பெண்கள் என 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி ஏற்றப்படவேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்திலும் வெலிஓயா பிரதேசத்திலும் இரண்டு ஆடைத்தொழில்சாலைகள் காணப்படுகின்றன. அவற்றில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அரசாங்கம் தடுப்பூசியினை பெற்றுக்கொடுத்துள்ளதை தொடர்ந்து மாவட்டத்தில் ஏனைய 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய நபர்களுக்கு தடுப்பூசி ஏற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தடுப்பூசி ஏற்றும் சமூக நிலையமாக புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அறிவிக்கப்பட்டுள்ளது.அத்தோடு 60 வயதுக்கு மேற்படடவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று மாலை ஆரம்பிக்கப்படவுள்ளது