மறந்தும் கூட சூரிய கிரகணத்தின் போது இவற்றை செய்து விடாதீர்கள் !

solar eclipse 1575000487 1577013173
solar eclipse 1575000487 1577013173

எதிர் வரும் 26.12.2019 வியாழக்கிழமை இடம்பெறவிருக்கும் சூரிய கிரகண நாளில் பொதுமக்கள் அவதானத்துடன் நடந்து கொள்ளுமாறு வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றிய செயலாளர் சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்கள் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 26.12.2019 வியாழக்கிழமை சூரிய கிரகணம் இடம்பெற இருக்கின்றது.

இலங்கை நேரப்படி காலை 08.09 மணிமுதல் பகல் 11.22 மணிவரையுள்ள காலப்பகுதிகளில் இது இடம்பெறும்.

இலங்கையில் சூரிய கிரகணம் தெளிவாக தென்படும்.

அன்றைய தினம் ஆஞ்சநேயர் ஜெயந்தி தினமென்பதாலும் பூஜைகள் காலை 8.00 மணிக்குள் முடிக்கப்பட வேண்டும்.

காலை 8.05 மணியளவில் ஆலயங்கள் நடைசாத்தப்பட்டு பகல் 11.30 மணிக்குப்பின்னர் பரிகார வழிபாடுகளின் பின்னர் திறக்கப்படும்.

ஆலயங்களில் எவ்விதமான வழிபாடுகளும் இடம்பெறமாட்டாது எனவும் இந்தக் கிரகண காலப்பகுதிகளில் உணவுகள் சமைப்பது அல்லது உட்கொள்ளுவதை தவிர்துக்கொள்ளவும்.

இக்காலத்தே உண்ணும் சமைக்கும் உணவுகள் சூரியனில் இருந்து வரும் செவ்வூதாக் கதிர்களால் நஞ்சாகும் தன்மை உடையன.

அதனால் அவற்றை முடிந்தவரை தவிர்க்கவும். அவ்வாறு உணவுகள் இருந்தால் அவற்றைத் தர்ப்பை புல்லினால் மூடி வையுகள். அதன் பின்னர் அவற்றைப் பாவிக்கலாம்.

வெற்றுக்கண்ணினால் சூரியனை இக்காலப்பகுதிகளில் பார்ப்பதனைத் தவிர்கவும். ஈரத்துணி கொண்டு பார்க்கலாம்.

கர்ப்பிணிப்பெண்கள் இக்காலப்பகுதிகளில் வெளியில் செல்வதையோ அல்லது சூரிய கிரகணத்தினைப் பார்ப்பதனையோ தவிர்க்கவும் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.