இன்று விசாரிக்கப்படவுள்ள ராஜிதவின் மனு

4 rt
4 rt

குற்றப் புல­னாய்வுத் திணைக்­களம் தன்னைக் கைது செய்ய முன்னர் முன் பிணையில் தன்னை விடு­விக்­கு­மாறு முன்னாள் அமைச்­சரும் ஐக்­கிய தேசிய கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ராஜித்த சேனா­ரத்ன இரண்­டா­வது தட­வை­யா­கவும் தாக்கல் செய்த முன் பிணைக் கோரிய மனு இன்று விசா­ர­ணைக்கு வர­வுள்­ளது.

கொழும்பு பிர­தான நீதிவான் நீதி­மன்றில் இம்­மனு மீது இன்று விசார­ணைகள் இடம்­பெ­ற­வுள்­ளது.

ஏற்­க­னவே ராஜித்த சேனா­ரத்ன தாக்கல் செய்த முதல் முன் பிணை கோரிய மனு­வா­னது, தான் கைது செய்­யப்­படப்போவது எந்த சட்டப் பிரிவின் கீழ், எந்த குற்­றத்­துக்­காக என்­பதை குறித்த மனு­விலோ அல்லது முன்­வைக்­கப்­பட்­டுள்ள சத்­தியக் கட­தா­சி­யிலோ மனு­தாரர் தெரி­விக்­காத நிலையில், அது தொடர்பில் தீர்­மானம் எடுக்க முடி­யாது எனக்கூறி கொழும்பு பிர­தான நீதிவான் லங்கா ஜெய­ரத்ன கடந்த வெள்ளியன்று மனுவை நிரா­க­ரித்­தி­ருந்தார்.

இந் நிலையில் அன்­றைய தினம் மாலை மீள, முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனா­ரத்­ன­வினால் கொழும்பு பிர­தான நீதிவான் நீதி­மன்­றுக்கு முன் பிணைக் கோரி இரண்­டா­வது தட­வை­யா­கவும் மனு தாக்கல் செய்­யப்­பட்­டது.

முன்னர் முன்­வைத்த மனு நிரா­க­ரிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து , 1997 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க பிணை சட்­டத்தின் 21 ஆவது அத்தியாயத்துக்கு அமை­வாக, முன்­னைய மனுவில் இருந்த வழுக்­களை திருத்தி இந்த மனு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. இந் நிலையில் திருத்தி மீள தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள முன் பிணை மனு இன்று விசா­ர­ணைக்கு வர­வுள்­ளது.