டெல்டா வைரஸ் பரிசோதனைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுப்பு – சந்திம ஜீவந்தர

118888353 chandimagmcopysocialcardassetstouse
118888353 chandimagmcopysocialcardassetstouse

கொவிட் – 19 வைரஸின் திரிபான டெல்டா வைரஸ் தொடர்பான பரிசோதனைகள் இன்றைய (திங்கட்கிழமை) தினத்திலிருந்து மீளவும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூற்று மருத்துவப்பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியநிபுணர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் 96 மாதிரிகளை அடிப்படையாகக்கொண்டு மேற்படி பரிசோதனைகள் மீண்டும் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் அடையாளங்காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மாதிரிகள் எழுந்தமானமான அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டு, மேற்படி டெல்டா வைரஸ் தொடர்பான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட பரிசோதனைகளின் முடிவுகளை எதிர்வரும் ஒருவாரகாலத்திற்குள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கையளிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் விசேட வைத்தியநிபுணர் சந்திம ஜீவந்தர நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சுகாதாரப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 20 இற்கும் அதிகமானோர் திரிபடைந்த டெல்டா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருப்பது இனங்காணப்பட்டிருக்கும் அதேவேளை, அவர்களில் பெரும்பான்மையானோர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.