கடுமையான மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும்-வளிமண்டலவியல் திணைக்களம்

download 2 27
download 2 27

மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, அனுராதபுரம் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யகக்கூடும் என்றும், இதன்போது, கடுமையான மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழைப்பெய்யக்கூடிய சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்த்துக்கொள்ள திறந்த வெளிகளில் நடமாடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாளை பிற்பகல் 2.30 மணிமுதல் – நாளைமறுதினம் (19) பிற்பகல் 2.30 மணிவரையான காலப்பகுதியில் காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.

ஏனைய கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புத்தளம் முதல் கொழும்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பகுதி கொந்தளிப்பாக காணப்படும் என்றும், ஏனைய கடற்பகுதிகள் ஓரளவு கொந்தளிப்பாக இருக்கும் என அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.